​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சபரிமலையில் பெண் பக்தைகளின் பாதுகாப்புக்கு 600 பெண் போலீசார் -டிஜிபி லோக்நாத் பஹேரா அறிவிப்பு

Published : Oct 05, 2018 6:59 PM

சபரிமலையில் பெண் பக்தைகளின் பாதுகாப்புக்கு 600 பெண் போலீசார் -டிஜிபி லோக்நாத் பஹேரா அறிவிப்பு

Oct 05, 2018 6:59 PM

கேரளாவில் பெண் பக்தைகளின் பாதுகாப்புக்கு 600 பெண் போலீசார் பணிக்கு அனுப்பப்படுவதாக கேரள டிஜிபி லோக்நாத் பஹேரா ((Loknath Bahera)) தெரிவித்துள்ளார்.

கொச்சியில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தாங்கள் சட்ட ஒழுங்கு அமல்படுத்தும் பொறுப்பு கொண்டவர்கள் என்பதால், மதம், பாலினம் என எதுவும் பாராமல் கடமையாற்ற வேண்டியது தங்கள் பொறுப்பு எனக் கூறியுள்ளார்.

சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க பெண் பக்தைகள் வரும்போது, பெண் போலீசார் 600 பேரை பாதுகாப்புக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாகக் கூறியுள்ளார். கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும் பெண் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து வருகிறது.