​​ பெட்ரோல் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வு

பெட்ரோல் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வு

Jan 24, 2018 12:54 PM

பெட்ரோல் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 75 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பெட்ரோல் – டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படும் நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் 12 காசுகளாகவும் டீசல் விலை 66 ரூபாய் 84 காசுகளாகவும் உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னையில் பெட்ரோல் விலை அதிகபட்சமாக 74 ரூபாய் 91 காசுகளைத் தொட்ட நிலையில் அதைவிட அதிகமாக தற்போது உயர்ந்துள்ளது.

டெல்லியில் இன்று பெட்ரோல் விலை 72 ரூபாய் 36 காசுகளாகவும் மும்பையில் 80 ரூபாய் 23 காசுகளாகவும், கொல்கத்தாவில் 75 ரூபாய் 7 காசுகளாகவும் உள்ளது. 

டீசல் சென்னையில் லிட்டர் ஒன்றுக்கு இன்று 66 ரூபாய் 84 காசுகளாக இருக்கிறது.

டெல்லியில் 63 ரூபாய் 18 காசுகளாகவும், மும்பையில் 67 ரூபாய் 28 காசுகளுக்கும், கொல்கத்தாவில் 65 ரூபாய் 84 காசுகளுக்கும் ஒரு லிட்டர் டீசல் விற்பனையாகிறது. இவை தவிர பல்வேறு நகரங்களிலும் பெட்ரோல் – டீசல் விலைகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.