​​ லாரன்ஸ் பட தயாரிப்பாளர் அளித்த புகார் பொய்யானது – நடிகர் கயல் சந்திரனின் சகோதரர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லாரன்ஸ் பட தயாரிப்பாளர் அளித்த புகார் பொய்யானது – நடிகர் கயல் சந்திரனின் சகோதரர்

லாரன்ஸ் பட தயாரிப்பாளர் அளித்த புகார் பொய்யானது – நடிகர் கயல் சந்திரனின் சகோதரர்

Jan 24, 2018 12:52 PM

நடிகர் லாரன்ஸ் நடித்த சிவலிங்கா, குற்றம் 23 ஆகிய படங்களை தயாரித்தவர் வெங்கடேசன்.

இவர் கயல் படத்தின் நாயகன் சந்திரனுடன் இணைந்து திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை தயாரிக்க 5 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் தற்போது பணத்தை திருப்பி தராமல் தன்னை படத்தில் இருந்து நீக்கி ஏமாற்றி விட்டதாக வெங்கடேசன், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் பொய்யானது என்று கூறியுள்ள கயல் சந்திரனின் சகோதரர் ரகுநாதன் , திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்துக்குக்காக 2 கோடியே 49 லட்சம் ரூபாய் மட்டுமே தாங்கள் பெற்றதாகவும், ஏற்கனவே 1கோடி ரூபாய் திருப்பி அளித்துவிட்ட நிலையில் மீதம் ஒன்றரை கோடி ரூபாய் மட்டுமே கொடுக்க வேண்டி உள்ளது என்றும் தங்கள் மீது அவதூறான புகாரை அளித்திருப்பது குறித்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக கூறினார்