​​ தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்காத விஜயேந்திர சரஸ்வதி தேசிய கீதத்துக்கு எழுந்து நின்றதால் சர்ச்சை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்காத விஜயேந்திர சரஸ்வதி தேசிய கீதத்துக்கு எழுந்து நின்றதால் சர்ச்சை


தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்காத விஜயேந்திர சரஸ்வதி தேசிய கீதத்துக்கு எழுந்து நின்றதால் சர்ச்சை

Jan 24, 2018 12:49 PM

சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், தேசியகீதத்துக்கு எழுந்து நின்ற விஜயேந்திர சரஸ்வதி தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராயப்பேட்டையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், எச்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். இதில் பங்கேற்ற விஜயேந்திர சரஸ்வதி மட்டும் எழுந்து நிற்காமல் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார்.

விழா முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கும்போது விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார்.விஜயேந்திரரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.