​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மும்பையில் கிணற்றில் விழுந்து 2 பெண்கள், ஒரு குழந்தை உயிரிழப்பு

Published : Oct 03, 2018 6:37 AM

மும்பையில் கிணற்றில் விழுந்து 2 பெண்கள், ஒரு குழந்தை உயிரிழப்பு

Oct 03, 2018 6:37 AM

மும்பையின் விலே பார்லே பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் விழுந்து இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

பூஜையில் கலந்துக் கொள்ள அங்கு சென்ற 10 பெண்கள் இருட்டில் கிணறு இருப்பதை அறியாமல்அதனுள் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. கிணற்றை மூடியிருந்த கிரில் திடீரென விழுந்ததால் அதன் மீது நின்றிருந்த அனைவரும் 30 அடி ஆழத்தில் விழுந்துவிட்டனர். தீயணைப்பு துறையினர் போராடி 7 பேரை மீட்ட போதும் மூன்று பேரின் உயிரற்ற உடல்களைத்தான்  மீட்க முடிந்தது.