​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகாத்மா காந்திக்கு அமெரிக்காவின் உயரிய விருது வழங்கத் தீர்மானம்

Published : Oct 02, 2018 11:57 AM

மகாத்மா காந்திக்கு அமெரிக்காவின் உயரிய விருது வழங்கத் தீர்மானம்

Oct 02, 2018 11:57 AM

மகாத்மா காந்திக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப் பதக்கம் வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் பரிந்துரைத்துள்ளது. மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

காந்தியின் அகிம்சை, சமாதானம் ஆகிய கொள்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவருக்கு அமெரிக்காவின் உயரிய விருதான நாடாளுமன்றத்தின் தங்கப்பதக்கம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்காக நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் உறுப்பினர்கள் கரோலின் மலோனி, ஆமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால், துளசி கப்பார்டு ஆகியோர் செப்டம்பர் 23இல் ஒரு தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப்பதக்கம் வெளிநாட்டவர்களில் புகழ்பெற்ற ஒருசிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 1997இல் அன்னை தெரசாவுக்கும், 1998இல் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட சிலர் மட்டுமே பெற்றுள்ளனர்.