​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உபேர், ஓலா டாக்சி சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் உரிமம் ரத்து: கிரண்பேடி

Published : Sep 30, 2018 10:47 AM

உபேர், ஓலா டாக்சி சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் உரிமம் ரத்து: கிரண்பேடி

Sep 30, 2018 10:47 AM

புதுச்சேரியில் ஓலா, உபேர் டாக்சிகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ஆட்டோ ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் ஓலா, உபேர் டாக்சிகளை அறிமுகப்படுத்துவதற்கு அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக துணை நிலை ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் நிறுவனங்கள் அரசின் உரிய அனுமதி பெற்று டாக்சிகளை இயக்குவதற்கு உரிமை உண்டு என்றும், அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாடகை கார்களை இயக்கக்கூடாது என யாரேனும் தடுத்தாலோ அல்லது பயணிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தாலோ புகார் தெரிவிக்கலாம் என்றும், ஓலா, உபேர் டாக்சிகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ஆட்டோ ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.