​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தான் தாக்குதல் நடத்துவதாகத் தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் தகவல்

Published : Sep 29, 2018 6:17 PM

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தான் தாக்குதல் நடத்துவதாகத் தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் தகவல்

Sep 29, 2018 6:17 PM

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தான் தாக்குதல் நடத்துவதாகத் தாக்குதலுக்குள்ளான நாகை மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும், அவர்களின் படகுகளும் வலைகளும் சேதப்படுத்தப்படுவதும் தொடர்கிறது. இலங்கைக் கடற்படையினர் மற்றும் அந்நாட்டு மீனவர்கள்தான் தாக்குதல் நடத்தியதாகத் தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளபோதிலும் இலங்கை அரசு அதை மறுத்தது.

கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களைத் தாக்கியிருக்கலாம் என இலங்கை அரசு தெரிவித்தது. இந்நிலையில் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்களைத் தாக்கிய இலங்கை மீனவர்கள் அரிவாளால் தாக்கி , மீன்கள் வலைகள் ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி ஆகியவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் நாகூர் மீனவர் கண்ணனுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. 

இலங்கை மீனவர்களின் தாக்குதலில் காயமடைந்த நாகூர் மீனவர் கண்ணன், செறுதூர் மீனவர்கள் தர்மன், குமார், சுதாகர் ஆகியோர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகக் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓஎஸ்மணியன், காயமடைந்த மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை மீனவர்கள் தான் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என்றார். இது குறித்து மத்திய அரசுக்குத் தெரிவித்துக் கடலோரக் காவல்படையின் கண்காணிப்பை அதிகரிக்க வலியுறுத்தப்படும் என்று அவர் கூறினார்.