​​ பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்

Jan 24, 2018 12:35 PM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மும்பை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாயை எட்டியுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய் 12 காசுகளுக்கும், டீசல் 66 ரூபாய் 84 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் இன்று பல்வேறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதனால் ஆட்டோ, டாக்சிகள், தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகள் ஓடவில்லை.

அதேபோல், 90 சதவீத கேரள அரசுப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், வேலைக்குச் செல்வோரும், வெளியூர் செல்லும் பயணிகளும் ரயில்களையே நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள், தமிழக எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.