​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

Published : Sep 29, 2018 1:22 PM

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

Sep 29, 2018 1:22 PM

துபாயில் இருந்து கப்பல் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 4 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை, வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு, கப்பலில் 3 கண்டெய்னர்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதை வருவாய் புலனாய்வுத்துறை சோதனை செய்தபோது, இந்தோனேசியாவில் தயாரிக்கப்பட்ட 30 லட்சத்து 24 ஆயிரம் சிகரெட்டுகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர்.

இந்த கண்டெய்னர்கள் துபாயில் இருந்து வந்ததை அறிந்த அதிகாரிகள், சிகரெட்டுகளுடன் கண்டெய்னர்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வெளிநாட்டு சிகரெட்டுகளின் மதிப்பு 4 கோடியே 23 லட்சம் ரூபாய் என்றும், சிகரெட்டுகளை கடத்தி வந்த 4 பேரை கைது செய்துள்ளதாகவும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.