​​ ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸிலிருந்து நடால் பாதியில் விலகியதால் மரின் சிலிக் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸிலிருந்து நடால் பாதியில் விலகியதால் மரின் சிலிக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸிலிருந்து நடால் பாதியில் விலகியதால் மரின் சிலிக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Jan 24, 2018 12:13 PM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தின் போது காயம் காரணமாக விலகுவதாக ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் அறிவித்தார். குரோஷியாவின் மரின் சிலிக்கை எதிர் கொண்ட நடால், ஆட்டத்தின் பாதியிலேயே காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டார்.

கடும் வலியை சகித்துக் கொண்டே விளையாடிய நடால் மேற்கொண்டு தொடர முடியாததால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன் மூலம் மரின் சிலீக் வெற்றி பெற்று 2 வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நடால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிச் சுற்றுவரை முன்னேறி தோல்வியை சந்தித்தார்.