​​ ஜெயலலிதா சிகிச்சைக் குறித்து அப்போலோ அளித்த ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவக் குழு தேவை: விசாரணை ஆணையம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயலலிதா சிகிச்சைக் குறித்து அப்போலோ அளித்த ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவக் குழு தேவை: விசாரணை ஆணையம்

ஜெயலலிதா சிகிச்சைக் குறித்து அப்போலோ அளித்த ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவக் குழு தேவை: விசாரணை ஆணையம்

Jan 23, 2018 7:32 PM

அப்போலோ மருத்துவமனை பெட்டி, பெட்டியாக அளித்த மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவக் குழு தேவை என ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், பெட்டி, பெட்டியாக, ஆவணங்களை தாக்கல் செய்திருக்கிறது.

மேலும், எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை தொடர்பாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் ஆவணங்களை தாக்கல் செய்திருக்கிறார். 

இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி, உண்மைத் தன்மையை கண்டறியும் வகையில், மருத்துவ நிபுணர்கள் கொண்டு குழுவை அமைக்க வேண்டி, தமிழ்நாடு அரசுக்கு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, மருத்துவர் குழு அமைக்கப்பட்டால், ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, நீதிபதி ஆறுமுகசாமியிடம் அந்த மருத்துவக்குழு அறிக்கை சமர்பிக்கும் என கூறப்படுகிறது.