​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்த் - ஒரு சில இடங்களில் வன்முறை

Published : Sep 26, 2018 3:38 PM

பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்த் - ஒரு சில இடங்களில் வன்முறை

Sep 26, 2018 3:38 PM

மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க. பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தது. அண்மையில் தீனஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் மாணவர் போராட்டத்தின் போது போலீசாருடன் நடைபெற்ற மோதலில் 2 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

இதனை கண்டித்து பா.ஜ.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் ஒரு பேருந்து தீ வைத்துக்கொளுத்தப்பட்டது. ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு நடுச்சாலையில் டயர்களும் எரிக்கப்பட்டன.