​​ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்

Mar 16, 2018 4:06 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப் பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ - மாணவிகள் மற்றும் 36 ஆயிரத்து 649 தனித்தேர்வர்கள் என மொத்தம் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் எழுதுகிறார்கள். தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் 3 ஆயிரத்து 609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முறைகேடுகளை தடுக்க 6,900 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புழல் சிறைகளிலுள்ள 186 கைதிகள் 10-ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதுகின்றனர். இவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கும் 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் அடுத்தமாதம் 20-ந்தேதி முடிவடைகின்றன