​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விநாயகர் சிலைகள் கரைக்கும் போது பல்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர்

Published : Sep 25, 2018 8:07 AM

விநாயகர் சிலைகள் கரைக்கும் போது பல்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர்

Sep 25, 2018 8:07 AM

மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் போது பல்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ரெய்காட், ஜல்னா மற்றும் புனே பகுதிகளில் சிலைகளைக் கரைக்கும் போது நீரில் மூழ்கியும் சிலைகளால் நசுக்கப்பட்டும் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் சதாரா, பாந்த்ரா ஆகிய இடங்களில் தலா இருவரும் பிம்பிரி, பல்தானா, நான்டெட் மற்றும் அகமது நகர் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்திருப்பதாக மகாராஷ்டிர மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கிர்காம் சவுபதி என்ற இடத்தில் சிலையைக் கரைக்க கொண்டு செல்லும் போது படகு கவிழ்ந்தது. இதில் நீரில் மூழ்கிய 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.