​​ பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டதா? அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டதா? அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டதா? அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Sep 24, 2018 9:47 PM

தமிழகத்தில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டதா என  அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தெருவோரம் தூங்கிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்ட இரு குழந்தைகளை கண்டுபிடிக்கக்கோரி எக்ஸனோரா அமைப்பின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த , நீதிபதிகள் சத்தியநாராயணன், நீதிபதி சேஷசாயி முன் காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் சமூக நலத்துறை இயக்குனரை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் பதிவு செய்யப்படாத குழந்தை காப்பகங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என அக்டோபர் 25 ஆம் தேதி அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.