பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்ற கால்பந்தாட்ட போட்டி
Published : Mar 16, 2018 11:51 AM
மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள், மாடல்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகைகள் மந்திரா பேடி, அம்ரிதா புரி, ஷிபானி உள்ளிட்டோர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். பத்மாவத் படத்தில் வில்லனாக நடித்த ரன்வீர் சிங், வேர்வை சிந்தி கால்பந்து விளையாடினார். இதில் பங்கேற்ற மகளிர் அணியினர் கூட்டாக புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.