​​ பெட்ரோல், டீசல் வரியை குறைக்க பெட்ரோலியத்துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல், டீசல் வரியை குறைக்க பெட்ரோலியத்துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை

பெட்ரோல், டீசல் வரியை குறைக்க பெட்ரோலியத்துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை

Jan 23, 2018 4:54 PM

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைக்குமாறு பெட்ரோலியத்துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 40லிருந்து 50 சதவீதம் வரையில் இடம்பிடிக்கும் வரிதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதற்குக் காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கலால் வரியைக் குறைக்கும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் வரக்கூடிய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியைக் குறைக்குமாறு பெட்ரோலிய அமைச்சகம் மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது எனவும்  இந்தப் பரிந்துரை தொடர்பாக இறுதி முடிவை நிதியமைச்சகம்தான் எடுக்கும் எனவும் பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.