​​ வர்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு - 4 வாரங்களில் பரிசீலித்து உத்தரவிட தமிழக அரசுக்கு ஆணை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வர்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு - 4 வாரங்களில் பரிசீலித்து உத்தரவிட தமிழக அரசுக்கு ஆணை

Published : Sep 24, 2018 1:18 PM

வர்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு - 4 வாரங்களில் பரிசீலித்து உத்தரவிட தமிழக அரசுக்கு ஆணை

Sep 24, 2018 1:18 PM

வர்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய்  இழப்பீடு வழங்க கோரிய மனு   மீது 4 வாரத்தில் பரிசீலித்து உத்தரவிட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

கடந்த 2016 டிசம்பரில் வீசிய வர்தா புயலின்போது கடலுக்கு சென்ற 9 மீனவர்கள் மாயமாகினர். இதில் இருவரது உடல் மட்டும் நாகப்பட்டினம் கடற்கரையில் ஒதுங்கியது. பாதிக்கப்பட்ட 9 மீனவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா 1 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. மேலும் பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து  தலா 4 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்றும், உடனே வழங்க அரசுக்கு உத்தரவிட கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத்  அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிட்டது. இதுகுறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணை அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.