​​ மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் கார் ஓட்டிச் சென்றதால் 62 வயதான முதியவர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் கார் ஓட்டிச் சென்றதால் 62 வயதான முதியவர் கைது

மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் கார் ஓட்டிச் சென்றதால் 62 வயதான முதியவர் கைது

Jan 23, 2018 4:51 PM

இங்கிலாந்தில் 62 வயதான முதியவர் ஒருவர் 250 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டிச் சென்றதால் போலீசார் அவரைக் கைது செய்தனர்.

ஹாம்ப்ஷையர் பகுதியில் புறவழிச்சாலையில் ஆடி எஸ்4 வகை கார் ஒன்று வேகமாகச் சென்றதைக் கண்டு போலீசார் அதனைப் பின் தொடர்ந்தனர். அப்போது அந்தக் கார் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது தெரியவந்தது.

போலீசார் வாகனத்தில் இருந்த முகப்புக் கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் ஆடி காரின் வேகமும் தெரியவந்துள்ளது.

அந்தக் காரை மடக்கிப் பிடித்தபோது, அதனை ஓட்டிச் சென்றவர் பவுல் மேட்சம் என்ற 62 வயது முதியவர் என்பது தெரியவந்தது. இறுதியில் ஆல்டர்ஷாட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.