​​ மாட்டிறைச்சி தடை, ஹஜ் மானியம் ரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பங்கேற்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாட்டிறைச்சி தடை, ஹஜ் மானியம் ரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பங்கேற்பு

மாட்டிறைச்சி தடை, ஹஜ் மானியம் ரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பங்கேற்பு

Jan 23, 2018 4:48 PM

மாட்டிறைச்சி தடை, ஹஜ் மானியம் ரத்து உள்ளிட்டவற்றைக் கண்டித்து புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்.

காங்கிரஸ் சிறுபான்மை நலத்துறை சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நாராயணசாமி, மாட்டிறைச்சி தடை, முத்தலாக் அவசர சட்டம், ஹஜ் மானியம் ரத்து பற்றி, நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பப்படும் என்றார்.