​​ எரிபொருளை மிச்சப்படுத்துவது எப்படி? வல்லுநர்கள் கூறுவது என்ன?
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எரிபொருளை மிச்சப்படுத்துவது எப்படி? வல்லுநர்கள் கூறுவது என்ன?

எரிபொருளை மிச்சப்படுத்துவது எப்படி? வல்லுநர்கள் கூறுவது என்ன?

Sep 22, 2018 8:58 PM

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பது வாகன ஓட்டிகளை திக்குமுக்காட வைத்திருக்கிறது. விலையேற்ற, இறக்கம் ஒருபுறம் இருந்தாலும், எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்கான உத்திகளை அறிந்து கொள்வதே முதன்மையானது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

சென்னையில் சனிக்கிழமை அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 85 ரூபாய் 69 காசுகளாகவும், டீசல் விலை 78 ரூபாய் 10 காசுகளாகவும் உள்ளது. இருசக்கர வாகன உபயோகம் தவிர்க்க முடியாதாகி விட்ட இக்கால கட்டத்தில் எரிபொருள் விலையேற்றம் என்பது நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வாகனங்களை முறையாகவும், சில உத்திகளைக் கையாண்டும் இயக்கும் போது எரிபொருள் சிக்கனமாகும் என்றும், எரிபொருள் செலவு குறைக்கப்படும் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அதில் முதன்மையானது மணிக்கு 30 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்குவது. ஒரு நிமிடத்திற்கு கூடுதலான நேரம், சிக்னல்களில் நிற்க நேரிட்டால் வாகனத்தை அணைத்து விடுவது. டயர்களில் காற்றழுத்தத்தை முறையாக பரமாரிப்பதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் வாகனத்தை பழுதுபார்ப்பது அவசியம் என்று வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இரண்டாவது பட்சமாக, மதிய வேளையில் எரிபொருள் நிரப்புவதை தவிர்க்கலாம், வாகனத்தை இயக்கும் போது பிரேக்கில் இருந்து கை எடுத்து விடுவது எரிபொருள் சிக்கனத்திற்கு நல்லது. அதிக பாரம் ஏற்றிச் செல்வதை தவிர்க்கலாம். தனி ஒருவர் மட்டும் ஒரு காரில் செல்லும் போக்கை  கைவிட்டு பொதுப் போக்குவரத்தை நாடலாம். என்றும் வல்லுநர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

இதுதவிர சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத மின்சாரத்தால் இயங்கக் கூடிய இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தலாம். பத்து ரூபாய் செலவில் 70 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடிய வாகனங்களை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.Gfx in 3 ஏத்தெர் 450, ஹீரோ எலக்ட்ரிக் போட்டான், ட்வெண்டி டூ ஃப்ளோ, ஹீரோ என்.ஒய்.எக்ஸ். இ 5, ஒக்கினாவா பிரைஸ் (Ather 450, hero Electric photon, twenty two flow, hero nyx e 5) ஆகிய ஐந்து வாகனங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளன. மக்கள், மாற்று எரிசக்தியை நாடுவதும் சிறப்பான உத்தியாக இருக்கும் என்பதும் வல்லுநர்களின் அறிவுரை.