​​ வரதட்சணை கேட்டு குழந்தையை பிரித்ததால், பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வரதட்சணை கேட்டு குழந்தையை பிரித்ததால், பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி

Published : Jan 23, 2018 4:46 PM

வரதட்சணை கேட்டு குழந்தையை பிரித்ததால், பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி

Jan 23, 2018 4:46 PM

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வரதட்சணை கேட்டு குழந்தையை பிரித்ததால், பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திருவாவடுதுறையைச் சேர்ந்த பாவேந்தன் – சுகுணா தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், பாவேந்தன் வரதட்சணை கேட்டு சுகுணாவை கொடுமைப்படுத்தியதாகவும், நகை, பணத்துடன் வருமாறு விரட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது.

குழந்தையையும் பறித்துக் கொண்டதால் மனமுடைந்த சுகுணா, கதிராமங்கலத்தில் உள்ள தாய் வீட்டில் வைத்து விஷம் குடித்துள்ளார்.

மயக்கநிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுகுணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.