​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறைகளே இனி இருக்காது - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

Published : Sep 22, 2018 6:44 AM

ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறைகளே இனி இருக்காது - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

Sep 22, 2018 6:44 AM

தமிழக பள்ளிகளில் இனி ஆசிரியர் இல்லை என்ற நிலை இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.

பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மூலம் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஆசிரியர்கள் பற்றைக்குறை நீங்கிவிடும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக் கல்வித்துறையில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.