​​ பாக்.நிலைகள் மீது 9000 ரவுண்டு பீரங்கி குண்டுகள் சுட்டது இந்திய ராணுவம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாக்.நிலைகள் மீது 9000 ரவுண்டு பீரங்கி குண்டுகள் சுட்டது இந்திய ராணுவம்

பாக்.நிலைகள் மீது 9000 ரவுண்டு பீரங்கி குண்டுகள் சுட்டது இந்திய ராணுவம்

Jan 23, 2018 4:41 PM

பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சர்வதேச எல்லையருகே இந்தியப் படைகள் 9 ஆயிரம் பீரங்கிக் குண்டுகளால் தாக்குதல் தொடுத்தன.

இந்திய நிலைகள் மீது குறிவைக்கும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படைகளின் பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவத்தினர் கூறுகின்றனர்.

எல்லைப்பகுதிக்கு வந்து பாகிஸ்தான் உயரதிகாரிகள் தங்கள் வீரர்களைத் தூண்டிவிடுவதாகவும், கொடி அணிவகுப்புக்கு வர பாகிஸ்தான் தரப்பு முன்வரவில்லை என்றும் இந்திய வீரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே, கடந்த 5 நாட்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தெங்கள் கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனால், சர்வதேச எல்லைப் பகுதியில் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.