​​ அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயரும் - பிரதமர் மோடி நம்பிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயரும் - பிரதமர் மோடி நம்பிக்கை

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயரும் - பிரதமர் மோடி நம்பிக்கை

Sep 21, 2018 6:06 AM

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்காக உயரும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டின் நலனை காக்க எந்த ஒரு கடுமையான முடிவையும் எடுக்க மத்திய அரசு தயங்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அண்மையில் விஜயா வங்கி, தேனா வங்கி, மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகியவற்றை இணைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டெல்லியின் துவாரகாவில் நடைபெற்ற ஐ. ஐ.சி.சி அரங்கத்தின் தொடக்க விழாவில் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்திய பிரதமர் மோடி நாட்டின் நலனைக் காக்க தமது அரசு எந்த ஒரு கடுமையான முடிவையும் எடுக்கத் தயங்காது என்று உறுதிபடத் தெரிவித்தார்.

சுமார் 25 ஆயிரம் கோடியே 703 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் சர்வதேச கருத்தரங்க மற்றும் பொருட்காட்சி மையம் மூலம் 80 கோடி இளைஞர்களின் ஆற்றல் வெளிப்படும் என்று அவர் கூறினார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றும் அரங்கமாக இது திகழப்போகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் சில்லறை வர்த்தக துறையில் வேலை வாய்ப்பு பெருகி வருவதாக கூறிய அவர், பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றார். இதனால் அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்காகி 5 லட்சம் கோடி டாலர் என்ற நிலையை எட்டும் என மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

 

இவ்விழாவில் பங்கேற்பதற்காக துவாரகா வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். மாலை நேர டெல்லியின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோவில் பயணித்த பிரதமரைக் கண்டு ஆச்சரியம் அடைந்த பயணிகள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்