​​ பிரதமர் மோடி பிப்ரவரி 10ம் தேதி பாலஸ்தீனப் பயணம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி பிப்ரவரி 10ம் தேதி பாலஸ்தீனப் பயணம்

Published : Jan 23, 2018 3:31 PMபிரதமர் மோடி பிப்ரவரி 10ம் தேதி பாலஸ்தீனப் பயணம்

Jan 23, 2018 3:31 PM

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10ம் தேதி பாலஸ்தீனத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை இந்தியா ஆதரித்து வந்துள்ளது. கடந்த மே மாதம் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் டெல்லி வந்து மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேல் சென்ற போது பாலஸ்தீனத்திற்கு செல்லவில்லை.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்தியா வந்து மோடியை சந்தித்த போது, பாலஸ்தீனப் பயணம் குறித்து, அவருடன் மோடி ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.