​​ நோயாளிகளுக்கு ஊசி போட்டு கொலை செய்த கொடூர செவிலியர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நோயாளிகளுக்கு ஊசி போட்டு கொலை செய்த கொடூர செவிலியர்


நோயாளிகளுக்கு ஊசி போட்டு கொலை செய்த கொடூர செவிலியர்

Jan 23, 2018 3:08 PM

ஜெர்மனியில் ஆறு நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற நீல்ஸ் ஹொகல் மீது மேலும் 97 கொலைகள் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெர்லின் மருத்துவமனை ஒன்றில் ஆண் செவிலியராகப் பணியாற்றி வந்த நீல்ஸ் ஆறு நோயாளிகளுக்கு இதயத்துடிப்பை நிற்கச்செய்யும் வகையில் ஊசி போட்டு, அவர்கள் உயிருக்குப் போராடும் போது உதவுவது போல் நடித்து உறவினர்களிடம் பணம் பறித்து வந்தார்.

இச்செய்கையின் போது ஆறு நோயாளிகள் உயிரிழந்த நிலையில், தாம் செய்த கொலைகளை நீல்ஸ் ஒப்புக் கொண்டதால் தண்டனை பெற்றார்.

இந்நிலையில், அவர் 97 கொலைகளைச் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.