​​ ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கடும் அமளி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கடும் அமளி

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கடும் அமளி

Jan 23, 2018 12:57 PM

சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் நடைபெறும் தாக்குதல்கள் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் தொடர் அமளி ஏற்பட்டது. அவை தொடங்கியதும், சண்டை நிறுத்த மீறல்களால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர்.

பொதுமக்கள் உயிரிழப்புக்கு மத்திய-மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவையின் மையத்திற்கு நடுவே வந்து முழக்கங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பின்னர் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிடப்பு செய்தனர்.