​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Published : Sep 18, 2018 7:08 PM

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Sep 18, 2018 7:08 PM

சென்னை வளசரவாக்கத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரண் பார்த்திபன், தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

பணம் கொடுப்பவர்களை தலைமைச் செயலகம் அழைத்துச் சென்று அங்குள்ள அதிகாரிகளின் உதவியாளர்களிடம் நெருக்கமாக பேசுவது போல் காட்டி நம்பவைத்துள்ளார். ஆனால் கடைசிவரை வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்துள்ளார்.

இவரை நம்பி ஏமாந்தவர்களில் சூளைமேட்டைச் சேர்ந்த 3 பேர் துணை ஆணையரிடம் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து சரண் பார்த்திபனை கைது செய்து வளசரவாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.