​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரபேல் ஒப்பந்தம் - அக்.10க்கு விசாரணை ஒத்திவைப்பு

Published : Sep 18, 2018 6:39 PM

ரபேல் ஒப்பந்தம் - அக்.10க்கு விசாரணை ஒத்திவைப்பு

Sep 18, 2018 6:39 PM

ரபேல் போர் விமான ஒப்பந்தத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானம் வாங்க, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், பிரான்ஸ் நாட்டோடு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அமர்வு முன் செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது,  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். இதையடுத்து, மனு மீதான விசாரணை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.