​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
HBO.வுக்கு இணையாக 23 விருதுகளை வென்ற Netflix நிறுவனம்

Published : Sep 18, 2018 4:48 PM

HBO.வுக்கு இணையாக 23 விருதுகளை வென்ற Netflix நிறுவனம்

Sep 18, 2018 4:48 PM

புகழ்பெற்ற தொலைக்காட்சி நிறுவனமான ஹெச்.பி.ஓ.வுக்கு இணையாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 23 எம்மி விருதுகளை வென்றுள்ளது.

image

அமெரிக்க தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்கும் நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து கவுரவிக்கும் எம்மி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்செலீஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பிரைம் நேர நிகழ்ச்சிகளுக்கான 7 விருதுகள் உட்பட 23 விருதுகளை நெட்ஃபிளிக்ஸ் வென்றுள்ளது.

பிரிட்டிஷ் அரச குடும்பம் குறித்த த க்ரவுன் ((The Crown)) தொடரும், காட்லெஸ் ((Godless)) என்ற தொடரும் முக்கிய விருதுகளை தட்டிச் சென்றன. எனினும் ஹெச்.பி.ஓ. நிறுவனத்தின் புகழ் பெற்ற தொலைகாட்சி தொடரான 'கேம் ஆப் த்ரோன்ஸ்', தொடர் உயரிய விருதான 'அவுட் ஸ்டேன்டிங் டிராமா சிரிஸ்' உட்பட 9 விருதுகளை தட்டி சென்றது. இவை உட்பட ஹெச்.பி.ஓ.வும் 23 விருதுகளைப் பெற்றது.