​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெலங்கானாவில் அரசு வேலைக்கு இளைஞர்கள் போட்டா போட்டி

Published : Sep 18, 2018 4:46 PM

தெலங்கானாவில் அரசு வேலைக்கு இளைஞர்கள் போட்டா போட்டி

Sep 18, 2018 4:46 PM

தெலங்கானாவில் அரசு அலுவலக எழுத்தர் பணிக்கு பொறியியல், பிஎச்டி படித்த பட்டதாரிகள் உள்பட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

700 காலிப் பணியிடங்களுக்கு, பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு விண்ணப்பித்தவர்களில் 372 பேர் பிஎச்டியும், 539 பேர் எம்.பில்லும் முடித்தவர்கள். ஒன்றரை லட்சம் முதுநிலை பட்டதாரிகள், 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகளும் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தெலங்கானா அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் கன்டா சக்ரபாணி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்படும் நிலையில், அவர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு இல்லாததே அரசு வேலை பெற போட்டி போடுவதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.