​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு வரும் 22ந் தேதி முதல் ஸ்டெர்லைட்டில் ஆய்வு

Published : Sep 18, 2018 4:33 PM

நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு வரும் 22ந் தேதி முதல் ஸ்டெர்லைட்டில் ஆய்வு

Sep 18, 2018 4:33 PM

நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் செப்டம்பர் 22 முதல் 3 நாட்கள் ஆய்வு செய்யும் எனத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூடி சீல் வைத்துள்ளது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது- இந்நிலையில் தருண் அகர்வால் தலைமையிலான குழு செப்டம்பர் 22முதல் 3 நாட்களுக்கு  ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.