​​ இரவில் குடி போதையில் வாகனங்களை மறித்து அபராதம் வசூலிக்கும் SI
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரவில் குடி போதையில் வாகனங்களை மறித்து அபராதம் வசூலிக்கும் SI


இரவில் குடி போதையில் வாகனங்களை மறித்து அபராதம் வசூலிக்கும் SI

Jan 23, 2018 12:55 PM

தூத்துக்குடியில் இரவு வாகனச்சோதனையின் போது வாகன ஓட்டியை ஆபாசமாக பேசி மிரட்டும் காவல் உதவி ஆய்வாளரின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனச்சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் கடும் கெடுபிடி செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், தூத்துக்குடியில் புறக்காவல் நிலையம் ஒன்றின் வெளியே நாற்காலியில் அமர்ந்து கொண்டு காவலர் மூலம் வாகனங்களை மறித்து உதவி ஆய்வாளர் செல்வின் சாமுவேல் என்பவர் அபராதம் வசூலித்து வந்ததாக கூறப்படுகின்றது. 

அப்போது அந்த வழியாக தனது குடும்பத்தினருடன் மிதமான வேகத்தில் காரில் சென்ற ஒரு வாகன ஓட்டியை மறித்து, விசாரித்த உதவி ஆய்வாளர் செல்வின் சாமுவேல் ஆபாசமாக பேசி அந்த வாகன் ஓட்டியை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

வாகன ஓட்டியின் தாயார் சமரசப்படுத்த முயன்றார், ஒரு பெண் என்றும் பாராமல் அவர் முன்பே ஆபாசமாக பேசி , உதவி ஆய்வாளர் செல்வின் சாமுவேல் கண்ணியமில்லாமல் போதையில் மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

வாகன சோதனை மேற்கொள்ளும் காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள உயர் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு…!