​​ நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் ஆய்வு- ஜெயக்குமார் விளக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் ஆய்வு- ஜெயக்குமார் விளக்கம்

Published : Jan 23, 2018 12:48 PM

நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் ஆய்வு- ஜெயக்குமார் விளக்கம்

Jan 23, 2018 12:48 PM

நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு நடத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்துக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் ஆய்வு நடத்துவதாக கூறினார்.

டி.டி.வி.தினகரன் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய சூழலில் டி.டி.வி.தினகரன் தான் சிறைக்கு செல்வார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.