​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஷ அம்புகளால் துளைக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை

Published : Sep 15, 2018 7:58 AM

விஷ அம்புகளால் துளைக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை

Sep 15, 2018 7:58 AM

கென்யாவில் விஷஅம்புகளால் துளைக்கப்பட்ட யானைக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சையளித்த வீடியோ வெளியாகி உள்ளது.

image

கென்யாவில் மர்ம நபர்கள் அம்பு எய்ததில் ஆண் யானை ஒன்று வேதனையில் தவித்தது. தகவலறிந்த மருத்துவக் குழுவினர் ஹெலிகாப்டர் மற்றும் ஜீப்பில் யானையைப் பின்தொடர்ந்து சென்று மயக்க ஊசி செலுத்தினர். இதனால் மலைபோன்ற உருவம் தடாலென மயங்கிச் சரிந்தது.

இதையடுத்து யானைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், தொடர்ந்து அதன் நடமாட்டத்தையும், தந்தம் கடத்துபவர்களின் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகின்றனர்.