​​ காங்கேயத்தில் இரண்டு பல்பொருள்அங்காடிகளின் மேற்கூறைகளை உடைத்துக் கொள்ளை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங்கேயத்தில் இரண்டு பல்பொருள்அங்காடிகளின் மேற்கூறைகளை உடைத்துக் கொள்ளை

காங்கேயத்தில் இரண்டு பல்பொருள்அங்காடிகளின் மேற்கூறைகளை உடைத்துக் கொள்ளை

Sep 14, 2018 6:56 PM

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இரண்டு பல்பொருள்அங்காடிகளின் மேற்கூறைகளை உடைத்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த கொள்ளையனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

காங்கேயம் திருப்பூர் சாலையில் ஜெயகுமார் என்பவருக்குச் சொந்தமான பேபி ஸ்டார் என்ற பல்பொருள் விற்பனைக் கடை உள்ளது. வியாழக்கிழமை இரவு விற்பனையை முடிந்ததும் ஜெயகுமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அதிகாலை 4 மணியளவில் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் ஒருவன், அங்கிருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றான். இதேபோல் அருகிலுள்ள மற்றொரு கடையிலும் கொள்ளை நடைபெற்றுள்ளது.

இரு கொள்ளை சம்பவங்கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனை தேடி வருகின்றனர்.