​​ ராணுவப் பயிற்சியை நிறைவு செய்த தினத்தில் காதலை வெளிப்படுத்திய இளைஞர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராணுவப் பயிற்சியை நிறைவு செய்த தினத்தில் காதலை வெளிப்படுத்திய இளைஞர்

Published : Sep 14, 2018 6:29 PM

ராணுவப் பயிற்சியை நிறைவு செய்த தினத்தில் காதலை வெளிப்படுத்திய இளைஞர்

Sep 14, 2018 6:29 PM

ராணுவப் பயிற்சியை நிறைவு செய்த இளைஞர் ஒருவர் அன்றைய தினமே தாம் விரும்பிய பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய அழகிய தருணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 8-ம் தேதி சென்னை பரங்கிமலை ராணுவப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த வீரர்கள் நாட்டைக் காக்கும் பணிக்குச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது சந்த்ரேஷ் எனும் வீரர் தமது நீண்ட நாள் கல்லூரித் தோழி தாரா மேத்தாவிடம் காதலை வெளிப்படுத்தினார். இதைக் கண்ட தாராவும் மகிழ்ச்சியடைந்தார்.

கல்லூரி நாட்களிலேயே தாரா மேத்தா தம்மிடம் காதலை சொல்லிவிட்டதாகவும், ஆனால், தமது பெற்றோரின் அறிவுரைப்படி வாழ்வின் லட்சியத்தை நிறைவேற்றும் வாய்ப்பைக் கைப்பற்றும் அந்த தருணத்துக்காகத் தாம் காத்திருந்ததாகவும் சந்த்ரேஷ் விளக்கமளித்துள்ளார். நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த நாளில், காதலை வெளிப்படுத்தியது இரட்டிப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.