​​ மகேந்திரா நிறுவனம், வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் புகை மாசை வெளியேற்றாத வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகேந்திரா நிறுவனம், வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் புகை மாசை வெளியேற்றாத வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

Published : Sep 14, 2018 6:00 PM

மகேந்திரா நிறுவனம், வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் புகை மாசை வெளியேற்றாத வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

Sep 14, 2018 6:00 PM

மகேந்திரா நிறுவனம், வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் புகை மாசை வெளியேற்றாத வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி அமைப்புடன் இணைந்து செயல்பட்டு புகை மாசற்ற வாகனங்களைத் தயாரிக்கும் இலக்கை அடைய திட்டமிட்டிருப்பதாக மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதலுக்கு எதிராக சர்வதேச அளவில் எடுத்து வரும் முயற்சிகளுக்கு தங்களது நிறுவனத்தின் பங்களிப்பாக இது இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிசக்தியை கையாளும் திறனை மேம்படுத்துதல், புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியைப் பயன்படுத்துதல் போன்ற சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான இதர நடவடிக்கைகளிலும் மகேந்திரா நிறுவனம் கவனம் செலுத்த இருப்பதாக ஆனந்த் மகேந்திரா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.