​​ திமுக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை

திமுக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை

Sep 14, 2018 5:19 PM

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொருளாளராக துரைமுருகன் பொறுப்பேற்றதும், அக்கட்சியில் காலியாக இருந்த முதன்மைச் செயலாளர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

இதையடுத்து, அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின், கலைஞரை நினைவு கூர்ந்த போது கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் நம்பிக்கையோடு செயலாற்றுவேன் என்றார்.