​​ கொளத்தூரில் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்த வாழைப்பூக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொளத்தூரில் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்த வாழைப்பூக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை

Published : Sep 14, 2018 4:57 PM

கொளத்தூரில் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்த வாழைப்பூக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை

Sep 14, 2018 4:57 PM

சென்னை கொளத்தூரில் முழுக்க முழுக்க வாழைப்பூக்களைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுப்புது வடிவங்களில் பலவகைகளில் விநாயகர் சிலைகள் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை கொளத்தூர் பூம்புகார் பகுதியில், முழுவதும் வாழைப்பூக்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட விநாயகர் சிலையை ஏராளமானோர் கண்டு ரசித்து வழிபட்டுச் செல்கின்றனர். 32 அடி உயரம், 20 அடி அகலம் கொண்ட இந்த சிலையில் 6 ஆயிரம் வாழைப்பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த விநாயகர் சிலை கலைக்கபட்டு வாழைப்பூக்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.