​​ வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை உயரும்போதுதான் மக்கள், பண்ணை பசுமைக் கடைகளை நாடுகின்றனர் - செல்லூர் ராஜூ
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை உயரும்போதுதான் மக்கள், பண்ணை பசுமைக் கடைகளை நாடுகின்றனர் - செல்லூர் ராஜூ

Published : Sep 14, 2018 3:14 PM

வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை உயரும்போதுதான் மக்கள், பண்ணை பசுமைக் கடைகளை நாடுகின்றனர் - செல்லூர் ராஜூ

Sep 14, 2018 3:14 PM

வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை உயரும்போதுதான் மக்கள், பண்ணை பசுமைக் கடைகளை நாடுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சார்பில், நந்தம்பாக்கத்தில் அமைக்கப் பட்டுள்ள சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை அவர் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 100 சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்க திட்டமிடப் பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை உயரும்போதுதான் மக்கள், பண்ணை பசுமைக் கடைகளுக்கு வருவதால், அவற்றை தொடர்ந்து நடத்துவது சவாலாக உள்ளதாகவும் செல்லூர் ராஜூ கூறினார்.