​​ 83 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
83 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

83 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

Sep 14, 2018 12:58 PM

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 83 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே 43 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாலம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 40 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 ஆற்றுப்பாலங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், பூந்தமல்லி அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த 42 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு அச்சகங்களில் இளநிலை புத்தகம் கட்டுநர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழகத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய அளவிலான 3 மாநில விருதுகள், 2 மாவட்ட விருதுகள், கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்துக்காக பெற்ற தேசிய அளவிலான மாவட்ட விருது ஆகியவற்றை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.