​​ ஓடும் ரயிலில் 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அசாம் ராணுவ வீரர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓடும் ரயிலில் 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அசாம் ராணுவ வீரர் கைது


ஓடும் ரயிலில் 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அசாம் ராணுவ வீரர் கைது

Jan 23, 2018 12:43 PM

ஹைதராபாத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு தாயுடன் விரைவு ரெயிலில் சென்ற 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, அசாமை சேர்ந்த ராணுவ வீரரை, காட்பாடியில் வைத்து தமிழக ரெயில்வே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது 12 வயது மகளுடன் ஐதராபத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு விரைவு ரெயிலின் 3 ஆம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது உடன் பயணித்த அசாமை சேர்ந்த யோகேந்திர சிங் பால்வார் என்ற ராணுவ வீரர் அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. அவரை பிடித்த ரெயில்வே காவல்துறையினர் காட்பாடி ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

அந்த சிறுமியின் தாய் தனது மகளின் எதிர்காலம் கருதி புகார் அளிக்காததால் ராணுவ வீரர் விடுவிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளிக்காத நிலையில், ரெயில்வே காவல்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தமிழக ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் புகார் அளித்தார்.

இதையடுத்து இ.பி.கோ. 157 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து , சில்மிஷ ராணுவ வீரர் யோகேந்திர சிங் பால்வாரை ரெயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.