​​ ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரி சீராய்வு மனு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரி சீராய்வு மனு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரி சீராய்வு மனு

Sep 14, 2018 12:44 PM

ஸ்டெர்லைட் வழக்கை பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்க தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் விசாரணைக்கும், பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவின் ஆய்வுக்கும் தடை விதிக்க முடியாது என மறுப்புத் தெரிவித்து விட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.