​​ அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைக்க முயற்சி - பிரதமர் மோடி கடும் தாக்கு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைக்க முயற்சி - பிரதமர் மோடி கடும் தாக்கு

அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைக்க முயற்சி - பிரதமர் மோடி கடும் தாக்கு

Sep 14, 2018 6:14 AM

அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக, பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட பாஜக-வை சேர்ந்த தொண்டர்களுடன், பிரதமர் மோடி நமோ ஆப் மூலமாக கலந்துரையாடினார். அப்போது, காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணி அமைப்பது குறித்த கருத்தை, பாஜக தொண்டர்கள் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணியை அமைக்க, கட்சிகளை மட்டுமே பிணைப்பதாகவும், ஆனால், நாம் மக்களின் மனதோடு பிணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணிக்கு தலைவரோ, கொள்கையோ இல்லை என்றும், தம்மை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். நல்ல ஆட்சி நிர்வாகத்தை தரத் தவறியதாலும், முடிவு எடுக்கும் திறன் இல்லாததாலும், ஊழலாலும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சிப் பொறுப்பில் இருந்து காங்கிரஸ் அகற்றப்பட்டதாகவும், பாஜகவின் 4 ஆண்டு ஆட்சியின் மூலம் காங்கிரஸ் மற்றும் அவர்களது கூட்டாளிகளைப் பற்றிய உண்மைகள் அம்பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.

இப்போது எதிர்க்கட்சி என்ற வகையிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து விட்டதாகவும் மோடி சாடினார். காங்கிரஸ் கட்சி தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாலேயே, தம்மை வீழ்த்த மெகா கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.