​​ பிரபல வில்லன் நடிகரும், பாப் இசைப் பாடகருமான சிலோன் மனோகர் உடல்நலக்குறைவால் காலமானார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரபல வில்லன் நடிகரும், பாப் இசைப் பாடகருமான சிலோன் மனோகர் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல வில்லன் நடிகரும், பாப் இசைப் பாடகருமான சிலோன் மனோகர் உடல்நலக்குறைவால் காலமானார்

Jan 23, 2018 12:38 PM

பிரபல வில்லன் நடிகரும், பாப் இசைப் பாடகருமான சிலோன் மனோகர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

1970களில் இளையராஜா இசையில் வெளிவந்த “அவர் எனக்கே சொந்தம்” என்ற படத்தில், இலங்கையில் மிகவும் பிரபலமான பாடல் ஒன்று பயன்படுத்தப்பட்டது.

சுராங்கனி என்ற அந்தப் பாடலை இயற்றி பாடியவர் சிலோன் மனோகர். தமிழில் மலேசிய வாசுதேவன் பாடிய இந்தப் பாடல் தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து பிரபலமானது. இதே பாடலை சிலோன் மனோகர் 7 மொழிகளில் பாடியுள்ளார். 

இலங்கையில் பிறந்த அவர், சென்னைக்கு வந்து பாடகரானார். காஷ்மீர் காதலி, தீ , அதே கண்கள், ராஜா நீ வாழ்க, காட்டுக்குள் திருவிழா, மனிதரில் இத்தனை நிறங்களா, மாங்குடி மைனர் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சண்டைக்காட்சிகளிலும் நடித்துள்ளார்.

ஐந்து மொழிகளில் 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிலோன் மனோகர்,
தமிழ் மெகா தொடர்களிலும் நடித்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாப் இசை சக்ரவர்த்தி என்ற பட்டமும் பெற்றுள்ளார்.

சென்னையில் வசித்து வந்த சிலோன் மனோகர் நேற்றிரவு காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.