​​ ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 11 பேர் காயம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 11 பேர் காயம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 11 பேர் காயம்

Mar 14, 2018 10:13 PM

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை திரளானோர் கண்டு ரசித்தனர்.

மகாராஜாபுரத்தில் பிரதான வீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு,மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 250 காளைகள் களமிறக்கப்பட்டன. அவற்றைப் பிடிக்க வீரர்களும், பிடிபடாமல் தப்ப காளைகளும், மைதானத்தில் தீவிரம் காட்டியதை, பார்வையாளர்கள் ஆர்ப்பரித்து ரசித்தனர்.

சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், பீரோ, தங்கம் மற்றும் வெள்ளிகாசுகள் உள்ளிட்டவை பரிசளிக்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில், காயமுற்ற 11 வீரர்களுக்கு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.