​​ அனுமதியின்றி நிலத்தடி நீர் விற்பனை: வழக்கு பதிவு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனுமதியின்றி நிலத்தடி நீர் விற்பனை: வழக்கு பதிவு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

அனுமதியின்றி நிலத்தடி நீர் விற்பனை: வழக்கு பதிவு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

Sep 12, 2018 9:34 PM

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்பவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத், நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பவர்கள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க  உத்தரவிட்டனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனுமதியில்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனைச் செய்பவர்கள் மீது எத்தனை குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு வரும் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.